rahul gandhi elected as congress party national president
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்துவருகிறார். அண்மைக்காலமாக அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதால், கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்திதான் எடுத்துவருகிறார். எனவே அவரையே கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற குரலை அக்கட்சியின் நிர்வாகிகள் எழுப்பி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
காங்கிரஸ் தலைவராக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
