Breaking : எம்.பி., பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்!
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவிப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவியை இழப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் மூன்று மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் சுற்றிக்கை வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க..எனக்கு பாதுகாப்பு வேணும், இல்லைனா.. அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் கோர்ட்டில் மனு - வெளியான பகீர் தகவல்
இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்