ராகுல்காந்தி எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம்! - எதிர்க்கட்சியை ஒடுக்கும் செயல் - கனிமொழி கண்டனம்!
Rahul Gandhi disqualified as Lok Sabha MP : வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம்
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எத்தனையோ பிரச்சனைகளில் தூக்கிக்கொண்டிருக்கும் பாஜக அரசு, இந்த பிரச்சனையில் இவ்வளவு வேகமாக செயல்பட்டு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கிவிட வேண்டும் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது. என கனிமொழி கடு்ம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் பாஜகாவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். குற்ற பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்கு தகுதியற்றவர்கள். இன்று நம் ஜனநாயக நாடு ஒரு புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி, நம் தேசத்திற்காக போராடுகிறார். அதிகார வர்கத்திடம் உண்மையை பேசுகிறார். மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறார். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் பெண்கள் பிரச்சனைகளை எழுப்புகிறார். ஆர் எஸ் எஸ் மற்றும் மோடிக்கு எதிராக ஒரே அச்சமற்ற குரலாக ராகுல்காந்தி இருக்கிறார். அவருக்கு துணை நிற்பது இந்த தேசத்தின் கடமை. என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், மேல்முறையீடு செயல்பாட்டில் இருப்பதாக அறியப்பட்ட நிலையில், பாஜக அரசின் இந்த செயலும் அதன் வேகத்தாலும் தான் திகைத்துவிட்டேன். இது நமது ஜனநாயகத்திற்கு மோசமானது. என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் எம்பி பதவி ரத்து செய்யப்பட்டது. நாட்டில் திருடர்களை திருடன் என்று அழைப்பது குற்றமாகிவிட்டது. திருடர்களும் கொள்ளையர்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள், ஆனால், ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டார். இது ஜனநாயகத்தின் நேரடி கொலை என்றும், இது முடிவின் ஆரம்பம் எனவும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்,
பெரிய காரணங்களுக்கு இல்லாம், ஒன்றும் இல்லாத சிறிய காரணங்களுக்கு சிக்கிக்கொள்கிறார்கள் என காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்