தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் அதற்காக அமைக்கப்பட்டுவரும் தடுப்பு காவல் நிலையங்கள் குறித்தும் ஆர்எஸ்எஸ் பிரதமர் நரேந்திர மோடி  பாரதமாதாவிடம் பொய் சொல்கிறார் ( இந்தியா) என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் .  தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடிமக்கள் திருத்தப்பட்ட சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது .  அச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி ,  இந்தியாவில் தடுப்பு காவல் நிலையங்கள் இல்லை என்றும் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு தழுவிய அளவில் அமல்படுத்த படாது எனவும்  பிரதமர் மோடி கூறி வருவது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார்.  அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்,  மற்றும் நகர்ப்புற நக்சல்களும்  இணைந்து முஸ்லிம்கள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என வதந்தியை கிளப்பி வருகின்றனர் .  ஆனால்  நான் சொல்கிறேன் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.   இந்தியாவில் தடுப்பு காவல் மையங்கள் இருப்பதாகக் கூறுவதில் உண்மை  இல்லை ,  எனவே முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை .  குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு பொருந்தாது என பிரதமர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் ஆங்கங்கே  தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுவரும் வீடியோக்களை ஆதாரத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல்காந்தி ,  தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்படாது அது இல்லவே இல்லை  என பிரதமர் மோடி சொல்வது அத்தனையும் பொய் .  அதாவது ஆர்எஸ்எஸ் பிரதமர் மோடி பாரதமாதா (இந்தியா) விடம் பொய்  சொல்கிறார் எனவும் பதிவிட்டு,  மோடி பொய் பொய் பொய் என மூன்று தடவை குறிப்பிட்ட ஹாஸ்டேக் செய்திருக்கிறார் இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது .