Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி அடித்த அந்தர்பல்டி.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு நக்கலா நன்றி சொன்ன ராகுல் காந்தி

100 நாள் வேலைத்திட்டம் குறித்த தனது பார்வையை மாற்றிக்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. 
 

rahul gandhi convey his gratitude to prime minister modi for promoting upa initiative mgnrega
Author
Delhi, First Published May 18, 2020, 10:38 PM IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்(MGNREGA) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்கள் மிகுந்த பயனடைந்துவருகின்றனர். 

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் ரூ.61 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளது. 

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அருமையையும் இப்போதாவது பிரதமர் புரிந்துகொண்டாரே என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

rahul gandhi convey his gratitude to prime minister modi for promoting upa initiative mgnrega

இதுகுறித்து டுவீட் செய்துள்ள ராகுல் காந்தி, 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னர், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, 100 நாள் வேலைத்திட்டத்தை விமர்சித்து பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவை பதிவிட்டு, ராகுல் காந்தி பதிவிட்டுள்ள டுவீட்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார் பிரதமர் மோடி. அந்த திட்டத்தின் நன்மையை அறிந்துகொண்டு, அதை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios