மூவர்ணக்கொடி படத்தை நாங்களும் வைப்போம்.. நேரு டிபியை வைத்து பாஜகவை வெறுப்பேற்றிய காங்கிரஸ் !

‘ஆகஸ்ட் 2 முதல் 15 ஆம் தேதிவரை அனைவரும் சமூக ஊடக முகப்பு புகைப்படங்களில் (DP) தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன்’ என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

Rahul Gandhi Congress leaders change social media display pics to Nehru holding tricolour

கடந்த ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளோம். இதையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டுகிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும்.  ஆகஸ்ட் 2 முதல் 15 ஆம் தேதிவரை அனைவரும் சமூக ஊடக முகப்பு புகைப்படங்களில் (DP) தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன். 

தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தார். அவருக்கு தலைவணங்கி மரியாதை செய்கிறேன். இந்த நேரத்தில் மேடம் காமாவையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். தேசிய கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும். 

Rahul Gandhi Congress leaders change social media display pics to Nehru holding tricolour

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இப்போதும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில், ஆயுஷ் அமைச்சகம் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறது. சர்வதேச அளவில் ஆயுர்வேதம், இந்திய நாட்டு மருந்துகள் மீதானஈர்ப்பு அதிகரித்து வருகிறது.  அண்மையில் சர்வதேச ஆயுஷ் முதலீடு, கண்டுபிடிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.10,000 கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டது. சென்னையில் 44-வது செஸ்ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவுரவம் ஆகும். 

கடந்த ஜூலை28-ம் தேதி போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதே நாளில் இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்த இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபரில் நடைபெறும். தமிழகத்தை சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ள முடியும். 

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில்தான் 25 வயது நிரம்பிய வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார். நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது’ என்று பேசினார். 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

Rahul Gandhi Congress leaders change social media display pics to Nehru holding tricolour

இதனையொட்டி நேற்று முதல் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மற்றும் பொதுமக்கல் பலர் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை முகப்பு படமாக வைத்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரதமர் மோடி சொன்னதுக்கு எதிராக ஒரு படத்தை வைத்துள்ளார். அவர் வைத்திருக்கும் முகப்பு படத்தில், ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏந்தியிருக்கும் சாய்வுப் படத்தைக் காட்டுகிறது. 

முன்னாள் பிரதமர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், தேசிய கொடி நிறத்திலும் உள்ளது. மேலும் மூவர்ணக் கொடி நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது என்று இந்தியில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தி வத்ராவும் தனது ட்விட்டர் சுயவிவரப் புகைப்படத்தை மாற்றி பதிவிட்டுள்ளார். இந்த படத்தை காங்கிரஸ் தலைவர்கள் முகப்பு படமாக மாற்றிவருகிறார்கள். இது பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios