Rahul Gandhi celebrated New Year with Sonia in Goa

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தாய் சோனியா காந்தியுடன் கோவா நகரில் புத்தாண்டைக் கொண்டாடினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற சோனியா காந்தி, தனது ஓய்வு நாட்களை கோவாவில் செலவிட்டு வருகிறார். சைக்கிள் ஓட்டியும், நடை பயிற்சி செய்தும், மக்களுடன் ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிந்த நிலையில், அந்த மாநிலங்களுக்கு சென்று தேர்தலுக்கு பிந்தைய ஆய்வுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அதன்பின், கோவா மாநிலத்தில் ஓய்வு எடுத்து வரும் தனது தாய் சோனியா காந்தியை சந்திக்கராகுல் காந்தி சென்றார். அவருடனே 2018ம் ஆண்டு புத்தாண்டையும் கொண்டாடி மகிழ்ந்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ தெற்கு கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஓய்வு எடுத்து வருகிறார். அவரைச் சந்திக்கச் சென்ற கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயுடனே புத்தாண்டைக் கொண்டாடினார். தனிப்பட்ட முறையில் நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டதால், கட்சி சார்பில் எந்த தலைவர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைக்கப்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.