rahul gandhi arrived chennai to attend karunanidhi
சென்னையில் நடக்கவிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் வைரவிழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார்.
கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா ஆகியவை திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை, 5:00 மணிக்கு தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தலைமையில் கருணாநிதியின் வைர விழா நடைபெறவுள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலர் துரைமுருகன் வரவேற்கிறார்.
விழாவில், காங்., துணைத் தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், ஜம்மு- - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்.கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் உள்ளிட்ட காங்கிரசார் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
முன்னதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
