ராகு - கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள்" என்று திமுக தரப்பில் பாண்டிச்சேரியில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.. முக ஸ்டாலின், உதயநிதி, கருணாநிதி என 3 பேரின் போட்டோக்களுடன் அந்த போஸ்டர் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

 இந்த முறை ராகு கேது, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என கிரகங்கள் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்கள் தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது என்கிறது ஜோதிடம். திமுக அதிமுக அடுத்தாண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் மக்களை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.  

 இதுவரை அரசியலில் எதிர்பார்க்காத புதிய சாதனைகள் நடக்கும் என்றும், உலகளவில் இந்தியாவும் பேசப்படும் என்றும் ஆரூடம் சொல்லப்பட்டுள்ளது. ராகு கேது பெயர்ச்சியால் உலகத்தையே முடக்கி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு அழிக்கும் என்று ஜோதிடம் ரீதியாக சொல்லப்படுகிறது. அதனால், நம்பிக்கை உள்ள பலரும், தங்களது அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டி தற்போது நிலவி வருகின்றது.ஒரு தரப்பு அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் இன்னொரு தரப்பு திமுக இந்த முறை கட்டாயம் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டு வருகின்றது. 10 வருசமாக ஆட்சியில் இல்லாத நிலையில், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று திமுக தரப்பு முயன்று வருகிறது. இந்த சமயத்தில், புதுச்சேரி திமுக சார்பில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.. அந்த போஸ்டரை பிரபலமான பத்திரிகை ஒன்றில் விளம்பரமாகவும் தந்துள்ளனர்.. அந்த போஸ்டரில் "ராகு - கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துக்கள்" என்று கூறப்பட்டுள்ளது.