இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல்  போர் விமானத்தில் ஓம் என்று எழுதி அதற்கு பூஜை செய்தார் என்றும், அதை  அரசியல் ஆக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை  என உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ் நாத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்காக சுமார் ஆயிரத்தி 600 கோடி ரூபாய், மதிப்பில் சுமார் 38  ரஃபேல்  போர் விமானங்களை கொள்முதல்  செய்யும் நோக்கில் பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ரஃபேல் விமானங்களை நேற்று பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைத்தது.  அதைப் பெறுவதற்காக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது விமானங்கள் கப்பலில் ஏற்றப்பட  தயாராக இருந்தது.  அப்போது நேற்று விஜயதசமி என்பதால் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது இந்தியாவில் சம்பிரதாயங்கள் என்ற முறையில், ரஃபேல் போர் விமானங்களின் சக்கரத்தில் எலுமிச்சைப் பழம்ங்களை வைத்ததுடன் குங்குமத்தால் விமானத்தின் மீது ஓம் என்று எழுதி, பின்னர் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மலர்தூவி, தேங்காய் உடைத்து வழிபட்டார்.

 

அவரின் இந்த செயலை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.  நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்படும் விமானத்தில் இந்து மத அடையாளத்தை எழுதுவதும் அதற்கு பூஜை செய்வதும் சரியல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர்.   நாம் கொண்டாடும் பண்டிகையை போர் விமானத்துடன் இணைப்பது தவறு என்றும் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று ரஃபேல் விமானத்திற்கு இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே மத்திய அமைச்சர் செய்த சாஸ்திரா பூஜை நடத்தினார்.

இதை அரசியல் ஆக்கும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை. ஆனால்  இந்த கலாச்சாரத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சி இதை விமர்சித்து வருகிறது, என்றார்.  எதை விமர்சிக்க வேண்டும் எதை விமர்சிக்கக் கூடாது என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்  என அப்போது அவர் வலியுறுத்தினார்