ragul gandhi wil be select congress leader
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை இன்று (திங்கள்கிழமை) கூட்ட கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த தலைவர் பதவி தேர்தல் குறித்து அறிவிப்பும், தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவதற்கான இறுதிக்கட்ட பணிகளும் நடக்கும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 31-
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்வை டிசம்பர் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தலைவராக எழுவதற்கான தடைகள் இந்த கூட்டத்தில் நீக்கப்படுவற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஏற்கனவே அனைத்து மாநிலங்கள் சார்பாக, கட்சியின் தலைவராக ராகுல்காந்திதான் தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இறுதிமுடிவு
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “ கட்சியின் தலைவராக ராகுல்காந்தி உருவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இதில்எடுக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கல், வேட்புமனு பரிசீலனை, திரும்பப்ெபறுதல், தேர்தல் தேதி ஆகியவை இதில் முடிவு செய்யப்படும்.இப்போது வரை ராகுல்காந்தி ஒருவர் மட்டுமே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒருவரும் போட்டியிடவில்லை. ஆதலால், போட்டியின்றி ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார். இதைத்தான் அனைத்து மாநில நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்’’ என்று தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுக்கு முன்
இந்த பணிகள் அனைத்தும் முடிய அடுத்த 14 நாட்கள் வரை ஆகும் என்பதால், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் முடிவுக்கு முன் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பதவி ஏற்பார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் ஏற்கனவே இருமுறை தேர்தல் நடத்தும் தேதிகளை அறிவித்துவிட்டதால், இந்த முறை தேர்தல் இறுதி செய்யப்படும்.

நீண்டகாலத் தலைவர்
மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்த தேதிகளும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
எந்த விதமான தடையும் இன்றி 19 ஆண்டுகளாக கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீண்ட காலம் பதவி வகித்துள்ளார்.
