சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்தியா மகோற்சவ  என்ற பழங்குடியின மக்களின் நடன  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராகுல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது  அனைத்து மதங்கள், சாதிகளை சேர்ந்த மக்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. அனைத்து இந்தியனின் குரல் மக்களவை , மாநிலங்ளவை லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் கேட்கப்படும் வரை வேலைவாய்ப்பின்மை, மாநில பொருளாதாரம் ஆகியவற்றை சரிசெய்ய ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வளர்ச்சியில் இந்தியாவும் சீனாவும் ஒரே பாதையில் சென்று கொண்டிருந்ததை இதற்கு முன் உலகம் கண்டது. ஆனால் தற்போது இந்தியாவில் வன்முறை, பெண்கள் தெருக்களில் செல்ல பாதுகாப்பில்லாமல் உணருவது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது ஆகியவற்றை உலகம் பார்க்கிறது. 

அனைத்து துறைகளிலும் இந்தியா பின்னோக்கி செல்கிறது. என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பணமதிப்பிழப்பு என ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்கிறது என தெரிவித்தார். . இதே நிலை நீடித்தால் எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என்பது தான் ஏழைகளின் கேள்வி, என ராகுல் காந்தி தெரிவித்தார்.