தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என தெரிகிறது.

திமுகவுடன் கூடட்டணி உறுதியானதையடுத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி வருகிறது. மேலும் தங்கள் தொகுதி குறித்த லிஸ்ட்டையும் காங்கிரஸ் வழங்கியுள்ளது.

அதில் டாக்டர் செல்லக்குமார் கிருஷ்ணகிரி,… மாணிக் தாக்கூர் விருதுநகர்….. கிறிஸ்டோபர் திலக் பெரம்பலூர்…. சிடி மெய்யப்பன் வடசென்னை…. மோகன் குமாரமங்கலம் சேலம், ஜான்சி ராணி  தென்காசி…. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு… கார்த்தி சிதம்பரம் சிவகங்கை….முன்னாள் காங்கிஸ்  தலைவர் திருநாவுக்கரசர்  ராமநாதபுரம் இது தவிர திருச்சி ,  கடலூர், விழுப்புரம் தொகுதிகளையும் காங்கிரஸ். கேட்டுவருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் அதிக செல்வாக்கு பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர்ம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருவதாகவும் காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் போட்டியிடும்பட்சத்தில் பிரியாங்காவும் ராகுலுக்காக தமிழகத்தில் சில நாட்கள் பிரச்சாரம் செய்ய வருவார் என்கிறார்கள். வடக்கே அமேதி, தெற்கே குமரி என்று போட்டியிட்டால் இந்தியாவை இணைக்கும் மாபெரும் தலைவராக ராகுல் காந்தி விளங்குவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.