பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராணுவ அமைச்சராகவும், தற்போது கோவா முதலமைச்சராகவும் இருப்பவர் மனோகர் பாரிக்கர். அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணமடைந்தார். அப்போது அவரது உடலை ராமேஸ்வரம் கொண்டு வந்து இறுதி சடங்கு செய்யும் வரை அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தார்.

இது தமிழர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்நிலையில் மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே முதலமைச்சர் பணிகளை செய்து வருகிறார்.

இதனிடையே  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கோவாவில்  தற்போது ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கரை, ராகுல் காந்தி இன்று காலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும்  அவர் வேகமாக குணமடைவதற்காக வாழ்த்துத் தெரித்ததார்.

இந்த சந்திப்பு ஒரு கெகிழ்ச்சியான சந்திப்பு என மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.