நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான ராதார ரவி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தன்னுடைய குடும்பத்தில் இணைந்த்து போல் உள்ளது உணர்கிறேன் என பேட்டி அளித்த அவர், நான் நம்பி இருந்தவர், மறைந்துவிட்டார் என்று ஜெயல்லிதா பற்றி உருக்கமாக கூறினார்.

பழம்பெரும் நடிகரும், திராவிடர் கழகத்தின் முக்கிய தூண்களில் ஒருவருமான எம்.ஆர்-ராதாரவின் மகனும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நடிகர் ராதாரவி இன்று அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

ஆரம்பத்தில் திமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும், முக்கிய பிரமுகராகவும் ராதாரவி விளங்கினார். ஒரு கட்டத்தில் வருமானம் இல்லாமல், தனது வீட்டையே அடகு வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அப்போது, அதிமுக பெது செயலாளர் ஜெயலலிதா, அவருக்கு உதவியதாகவும், அந்த விசுவாசத்தின்பேரில், அவர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் அதிமுக சார்பில், சைதாப்பேட்டை இடை தேர்தலில்  மா.சுப்பிரமணியத்தை எதிர்த்து வெற்றி பெற்றார். அதன்பின்னர், நடிகர் சங்க பொது செயலாளராக பல ஆண்டுகள் ராதாரவி இருந்தார். சமீபத்தில் அதிமுகவில் இருந்து, ராதாரவி ஓரங்கட்டப்பட்ட நிலையில், விஷால் தலைமையிலான அணி, ராதாரவி அணியை தோர்க்கடித்தது. அதன்பின்னர் ராதார ரவி பல்வேறு சரிவுகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில், ஜெயல்லிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பிளவுப்பட்டு உள்ள நிலையில், ராதாரவி, திமுகவில் இணைந்துள்ளார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் ராதாரவி கூறியதாவது:-

திமுக இணைந்தது என் குடும்பத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை தருகிறது. இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலில் இருக்கும் இயக்கம் திமுக. முழுமையாக இருக்கும் இயக்கம் திமுக. ஏன் சொல்கிறேன் என்றால் சிதறி கிடக்கும் இடத்தில் இருப்பவர்கள் இங்கு வந்து சேர வேண்டும். 

 நான் நம்பி இருந்தவர்  இறந்து விட்டார்.  அவரைப்பற்றி பிறகு சொல்கிறேன். நாளை என் தளபதி பிறந்த நாள். இன்று என் தாயார் மறைந்த நாள் . அப்போது உறுதியாக என்னோடு இருந்தவர் தளபதி. நாளை தங்க சாலை பொதுக்கூட்டத்தில் விரிவாக பேசுகிறேன். 

 தற்போது என் மனதில் உள்ளதை பிறகு கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கு தகுதி உடைய தலைவன் யார் இருக்கிறார். ஸ்டாலினைவிட்டால் யார் இருக்கிறார்கள் . அவரால் தான் தமிழ்நாட்டை காக்க முடியும். இப்போது அதிமுக என்ற ஒன்றே இல்லை.

ஸ்டாலின் ஒருவர் தான் ஒப்பற்ற தலைவர் அவரால் தான் தமிழகத்தை காக்க முடியும் இவ்வாறு ராதாரவி பேசினார்.