Immediately began to talk in a meeting of the DMK the AIADMK had defected Radharavi

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு கட்சி மாறிய உடனே மீட்டிங்கில் பேச தொடங்கி விட்டார் ராதாரவி.

உலகத்திலேயே இவர்தான் அறிவாளி என்பது போன்ற தனது முதல் கூட்டத்தில் பேசிய ராதாரவி டாக்டர் ராமதாசையும் வைகோவையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசினார்.

இது அரசியல் என்றாலும் மாற்று திறனாளிகள் குழந்தைகள் பேசுவது போல நடித்து காண்பித்து பேசியதுதான் தற்போது பெரும் கொந்தளிப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதாரவி மாற்று திறனாளிகளை கிண்டலடித்து பேசியபோது கைதட்டி ரசித்து சிரித்த முட்டாள் கூட்டமும் நம்மிடமும் இருக்கத்தான் செய்கிறது.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் பல ஆண்டுகளாக ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட பல தகாத வார்த்தைகளை கூறி நம்மையறியாமலேயே பாதிக்கப்பட்டவர்களை மனதளவில் நோகடித்து வந்திருக்கிறோம்.

அவர்களின் வலியை நன்கு அறிந்திருந்த அப்போதைய முதலவர் கருணாநிதிதான் ஊனமுற்றவர்கள், நொண்டி போன்ற வார்த்தைகளை வைத்து இனி அழைக்க கூடாது.

“மாற்று திறனாளிகள்” என்ற பெயரை உலகுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை கவுரவபடுதினார்.

இப்படி மாற்று திறனாளிகளுக்கு மதிப்பையும் மாண்பையும் அளித்த தலைவனின் கட்சியை சேர்ந்த ஒரு நபர் இப்படி பேசலாமா என ராதாரவிக்கு கண்டனம் வலுத்துள்ளது.

ராதாரவி இப்படி பேசியவுடனே கட்சி மற்ற விசயங்களை பற்றியெல்லாம் கவலைபடாமல் ராதாரவிக்கு எச்சரிக்கையும் கண்டனமும் தெரிவித்த கனிமொழியின் செயல் பாராட்டுக்குரியது.