Asianet News TamilAsianet News Tamil

ராதாபுரம் ரிசல்ட்டை ஓப்பனாக வெளியிட்ட மு.க.ஸ்டாலின்... இன்பதுரை, துன்பதுரையாக்கிய திமுக..!

ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வருவதாகவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்றும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் ராதாபுரத்தில் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார். 

radhapuram assembly result...mk stalin speech
Author
Tamil Nadu, First Published Oct 6, 2019, 12:38 PM IST

ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வருவதாகவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்றும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் ராதாபுரத்தில் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகி பரணி கார்த்திகேயன் தன் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தார். பின்னர், நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 49 வாக்கு வித்தியாசத்தில் நம்முடைய அப்பாவு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதிமுக வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அதிமுகவின் எம்.எல்.ஏ., இன்பதுரைதான் சட்டமன்றத்தில் பொறுப்பிலிருந்தார். 

radhapuram assembly result...mk stalin speech

ஆனால், இப்போது இன்பதுரை துன்பதுரையாக மாறிவிட்டார். அப்பாவு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலமாக நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து  வாதாடி-போராடிய காரணத்தால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தபால் ஓட்டுக்கள் மூலமாக தில்லுமுல்லு நடைபெற்றிருக்கிறது. வேட்பாளராக நின்ற அப்பாவு ஏறக்குறைய 17 சுற்றுவரையில் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில், முன்னணியில் இருக்கிறார். 

கடைசியாக 19, 20, 21 என்று மூன்று சுற்றுகள் இருக்கிறது. அந்த மூன்று சுற்றுகளிலும் கடைசியாக தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்ற நேரத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி, அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்த திமுக ஏஜென்ட்கள் அனைவரையும் அடித்து விரட்டி விட்டு, வேட்பாளராக இருக்கக்கூடிய அப்பாவுவையே குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வந்து வெளியில் போட்டுவிட்டு, அவர்களாகவே ஒரு கணக்குப் போட்டு எண்ணி முடித்துவிட்டு, தபால் வாக்கு எண்ணிக்கையில் 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற ஒரு தீர்ப்பினை வெளியிட்டார்கள்.

இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். முறையாக தேர்தல் நடந்திருந்தால் நாம்தான் ஆட்சியில் இருந்திருப்போம். 1 சதவீத வித்தியாசத்தில் தான் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. இன்னும் 10, 12 இடத்தில் நாம் வெற்றி பெற்றிருந்தால் தி.மு.க.தான் ஆட்சிக்கு வந்திருக்கும். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பிரதமர் மோடி, அ.தி.மு.க. ஆட்சி அமைத்த மாதிரி வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்.

radhapuram assembly result...mk stalin speech

பிரதமரே வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார் என்றால் அதிகாரிகள் என்ன செய்வாங்க. ஆகவே தில்லுமுல்லு நடத்தி 49 ஓட்டு வித்தியாசத்திலே தி.மு.க. வெற்றி பெற்றதை அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து எம்.எல்.ஏ.வாக 2½ வருடம் இன்பதுரை பணியாற்றி கொண்டிருக்கிறார். இப்போது நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் வாக்குகளை எண்ணி உள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கையை சந்திப்பதாக இன்பதுரை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் இதை எண்ணக்கூடாது என்று உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். இதில் தவறு நடந்துள்ளது. அது வெளியில் வந்துவிடும் என்று பயப்படுகிறார்.

ஓட்டு எண்ணிக்கையை எப்படியாவது நிறுத்திவிட இன்பதுரை முயன்று நீதிமன்றத்தை மீண்டும் நாடினார். இந்த வழக்கில் ஓட்டு எண்ணிக்கை முடிவை 23-ம் தேதி வரை அறிவிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவை நான் சொல்ல ஆசைதான். ஆனால் நான் சொல்லக்கூடாது நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக்கில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதை யாராவது மறுக்கிறார்களா? என்றால் மறுக்கவில்லை.

radhapuram assembly result...mk stalin speech

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் 21-ம் தேதி முடிந்து அந்த தேர்தல் முடிவு மட்டுமல்ல ராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவும் வந்து விடும். அப்போது ராதாபுரத்தையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்களை நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற செய்தி வரத்தான் போகிறது. ஆகவே அடுத்ததாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட கூடிய ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமைய போகிறது. இப்போது நடக்கிற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சியே அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைதான் இப்போது நிறைவேறி கொண்டு இருக்கிறது. எதையும் இந்த ஆட்சி தட்டிக் கேட்பதில்லை. அடிமைத்தனமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இப்போது மீண்டும் கட்-அவுட், பேனர் வைக்க இந்த அரசு நீதிமன்றம் அனுமதி கேட்டிருக்கிறது. இதைவிட வெட்கம் என்ன இருக்க முடியும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios