Asianet News TamilAsianet News Tamil

சென்னையைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன்... சாதித்துகாட்டுவாரா?

சுனாமி உள்பட பல பேரிடர்களைத் திறமையாக கையாண்டவர் என்ற பெயர் ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில், ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Radhakrishnan IAS appointed as special officer for corona works in chennai
Author
Chennai, First Published May 1, 2020, 8:52 PM IST

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை தமிழக அரசி நியமித்துள்ளது.Radhakrishnan IAS appointed as special officer for corona works in chennai
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினந்தோறும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக வட சென்னை பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா  தடுப்புப் பணிகளுக்கு சிறப்பு அதிகரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

Radhakrishnan IAS appointed as special officer for corona works in chennai
சென்னைக்கு ஒட்டுமொத்தமாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள மண்டலங்கள் வாரியாக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சென்னை கிழக்கு மண்டலத்துக்கு ஆபாஷ்குமார், வடக்கு மண்டலத்துக்கு மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டலத்துக்கு அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்துக்கு அபய் குமார் சிங், புறநகர்ப் பகுதிகளுக்கு பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.Radhakrishnan IAS appointed as special officer for corona works in chennai
சுனாமி உள்பட பல பேரிடர்களைத் திறமையாக கையாண்டவர் என்ற பெயர் ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில், ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும் கொரோனா ஒழிப்பு பணியில் திறம்பட செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios