விடமாட்டோம் என்று திமுகவினர் கொக்கரிப்பார்கள். எல்லோரையும் திமுக பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என பாஜக பிரமுகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘’சகோதரர் ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் உண்மை சொல்லிவிட்டுப் போய்விடுவார். நான் ரஜினிகாந்தை பக்கம் பக்கமாக திட்டிக் கொண்டிருந்தேன். அது உண்மைதான். அரசியலில் காலியிடம் இருக்கிறது என்று ஒருமுறை சொல்லிவிட்டார்.

அதற்க என்னை கூப்பிட்டு திமுகவினர் அவரைப் பற்றி பேச வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நானும் ரஜினியை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டேன். இரண்டாவது நாளிலேயே அவரைப் பற்றி பேச வேண்டாம் என்று திமுகவினர் கேட்டுக்கொண்டனர். ஏன் என்று கேட்டேன்.  அவரை முரசொலி பவள விழாவிற்கு அழைத்துள்ளோம் எனக் கூறுகிறார்கள். இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? வேண்டும் என்றால் வைத்துக்கொள்வது. தேவை இல்லை என்றால் தூக்கிப் போடுவது என்றால் எப்படி?

அதை ரஜினிகாந்த் புரிந்துகொண்டார். அதனால்தான் அவரை பாராட்டி கொண்டிருக்கிறோம். விடமாட்டோம் என்று திமுகவினர் கொக்கரிப்பார்கள். நான் தனியாக வந்தால் நீ அடித்தால் நீ ஹீரோ. நீ தனியாக வந்தால் நான் அடித்து விடுவேன். நான் தான் ஹீரோ. எல்லோரையும் திமுக பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. யாராவது எதையாவது பேசி விட்டால் போதும். போனை எடுத்து நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று வீராவசனம் பேசுவார்கள். உடனே அந்த நம்பருக்கு மீண்டும் நாம் அழைத்தால் அந்த சிம் கார்டை மாற்றி கழட்டி தூக்கி எறிந்து விடுவார்கள். எதற்கெடுத்தாலும் உங்கள் வீட்டு அருகில் வந்து போராட்டம் நடத்துவோம்  என்று மிரட்டுவார்கள்’’என அவர் தெரிவித்தார்.