ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு.. வாரி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி. ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர் நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், கே. நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ். ஆர் பாலசுப்ரமணியம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

Rabindranath Kumar MP, son of OPS,  and Senkettaiyan is the main responsibility by dmk goverment  .. Chief Minister Stalin provided

மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதும் உள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி, முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய பிரச்சனைகளில் அனைவரையும் அங்கீகரிக்கும் வகையில், அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கும் அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார். 

Rabindranath Kumar MP, son of OPS,  and Senkettaiyan is the main responsibility by dmk goverment  .. Chief Minister Stalin provided

இதையும் படியுங்கள்:  நடுத்தர குடும்பங்களின் வீடு கட்டும் கனவில் மண்.. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 70 முதல் 100 ரூபாய் உயரும் அபாயம்.

இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது, கொரோனா உச்சத்தில் இருந்தபோது அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை இடம்பெறச் செய்து அவரின் கருத்துக்களையும் அரசு பரிசீலித்தது. அந்த வரிசையில் தற்போது மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் எம்பி, எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Rabindranath Kumar MP, son of OPS,  and Senkettaiyan is the main responsibility by dmk goverment  .. Chief Minister Stalin provided

இதையும் படியுங்கள்: நிலக்கரி காணாமல் போன விவகாரம்.. அறிக்கை வந்தவுடன் ஆட்டம் ஆரம்பம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி. ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர் நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், கே. நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ். ஆர் பாலசுப்ரமணியம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்களான விஜி ராஜேந்திரன், டாக்டர் எழிலன் நாகநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதில் இடம் பெற்றுள்ளனர். அதிமுக திமுக என்ற பாகுபாடின்றி முதலமைச்சர் குழு அமைத்திருப்பதை பலரும் பாராட்டப்பட்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios