சென்னை ராயப்பேட்டை மகளிர் தின நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது மக்களிடம் இருந்து சில கேள்விகள் கமலஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தார். 

அவை வருமாறு:

கேள்வி: நான் நாட்டிற்கா வேலை செய்வதா அல்லது வீட்டிற்காக வேலை செய்வதா? 

பதில்: நாடு என்பது வீட்டில் இருந்து ஆரம்பமாகிறது. கோவிலுக்கு போகும் கண்ணியம் தேர்தல்  வாக்குப்பதிவிலும் இருக்க வேண்டும். கோவில்களை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கலாம். அனைத்து இடங்களுக்கு சென்று புரிந்து கொண்டவன் நான். 

கேள்வி: உங்களை ஏன் ஆதரிக்க வேண்டும்? மற்றவர்களை போல் நீங்களும் நசுக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? 

பதில்: இந்த சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். உங்களை விலைக்கு வாங்க மாட்டேன். அவ்வாறு நீங்கள் கண்காணித்து கொண்டே இருந்தால் நான் மட்டும் அல்ல. யாருமே தவறமாட்டார்கள். 

கேள்வி: ஊழல் கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைக்கமாட்டேன் என உறுதியாக அறிவிப்பீர்களா?

பதில்: அறிவிச்சுட்டா போச்சு. நான் நினைத்திருந்தால் ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் கயவர்களுடன், திருடர்களுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என சத்தியம் செய்து கூறுகிறேன். இது ஆட்சிக்காக கொடுக்கும் வாக்குறுதி அல்ல. கட்சி ஆரம்பிக்கும்போது கொடுக்கும் வாக்குறுதி. 

கேள்வி : உங்களுக்கு பிடித்த பெண் தலைவர் ஒருவரை பற்றி கூறுங்களேன்? 

பதில்: என் தாய். அவர்தான் என் தலைவி. அவருக்கு அரசியல் தெரியாது. அன்பு மட்டுமே தெரியும். எங்களை கவனித்தவள் அவரை கவனித்துக்கொள்ள தவறிவிட்டாள்.