கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

’’10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மட்டுமின்றி 8,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்த பின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.