Purusha commission will be opened

மனைவிகளின் டாச்சர் தாங்காமல் மிகுந்த கஷ்டப்படும் ஆண்களை மீட்க ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியிறுத்தியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு எதிராக கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறார்கள். இதே போல் சிறுபான்மையினர் ஆணையம், தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையம், பழங்குடிணினர் நல ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் என பல ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த இனத்தவர்களுக்கான கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றவே இத்தகைய ஆணையங்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போல் அன்றாடம் மனைவியிடம் ஆண்கள் படும் அவதிகளில் இருந்து ஆண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என உலகில் கோடிக்கணக்கான ஆண்கள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.

அவர்களது கண்ணீரைத் துடைக்க தற்போது முன்வந்துள்ளார் ஆந்திர பிரதேச மகிளா கமிஷனின் தலைவியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவவருமான நன்னாபேனி ராஜகுமாரி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்களின் நலனுக்காக தனியாக கமிஷன் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘புருஷா கமிஷன்’ என்ற பெயரில் தனியாக ஒரு ஆணையம் அமைக்க வலியுறுத்தியுள்ள அவர், பெண்களின் அராஜகத்திலிருந்து ஆண்களை காக்க இந்த ஆணையம் துணை நிற்கும் என கூறியுள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக தவறான உறவை நம்பி போகும் மனைவிகள் ஆண்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இவற்றை தடுக்கவே ‘புருஷா கமிஷன்’ அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆண்களுக்கும் சமமான அளவு நியாயம் கிடைக்கவும், ஆண்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதை தடுக்கவும், இந்த கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜகுமாரியின் இந்த கோரிக்கை தேவையற்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நாள்தோறும் ஆண்களால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வரும் நிலையில், மகிளா ஆணையத்தின் தலைவியின் இந்த கருத்து ஏற்க முடியாதது என்று தெரிவித்துள்ளனர். 

எது எப்படியோ, மனைவிகளின் கொடுமையில் இருந்து கணவன்களை காப்பாற்ற ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றால் நன்னாபேனி ராஜகுமாரி தான் ஆண்களுக்கு காவல் தெய்வம் என்றே சொல்லலாம்.