தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

 சென்னையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருப்பதி மலைக்கு சென்றார் துணை முதல்வர் ஓபிஎஸ். அங்கு சுவாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்றிருந்த எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.மேலும், அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்தனர். இதனையடுத்து, அவர்கள் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் தரிசனம் செய்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.