நீண்டகாலம் விழுப்புரம் திமுக மாவட்டச்செயலாளராக இருந்து பொன்முடி வகித்து வந்த பதவி தற்போது புகழேந்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திமுகவில் ஒரே நேரத்தில் அமைச்சர்களாக வலம் வந்தவர்கள் நேரு பொன்முடி ஆகியோர். கே.என். நேரு கட்சியின் முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டவுடன் பொன்முடி பொங்கியெழுந்தார்.நேருக்கு மட்டும் முதன்மை செயலாளர் பதவி எனக்கு மட்டும் மாவட்டச்செயலாளர் பதவியா? என்று பொங்கியெழுந்த நேரத்தில் தான் திமுகவின் பொதுக்குழு காணொளிக்காட்சி மூலம் கூடியது.அப்போது பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி தந்து அவரது தாக்கத்தை குறைத்தார் ஸ்டாலின்.

திமுக பொதுச்செயலாளராக  துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பொருளாளராக டி.ஆர்.பாலுவும், திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடியும், ஆ. ராசாவும் தேர்வாகினர். இதை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .