அமைச்சர் உதயகுமார் மிகப்பெரிய நடிகர் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தினகரன் அணி சார்பில் மதுரையில் நடைபெற்றது. இதில்கலந்துகொண்ட தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அமைச்சர் உதயகுமார் குறித்து பேசிய புகழேந்தி,  உதயகுமார் மாதிரி ஒரு நடிகனை நான் பார்த்ததே இல்லை. எந்த பள்ளியில் நடிப்பை படித்தாரோ தெரியல.. உலக மகா நடிப்பு. திடீர்னு தாடி வைப்பார், திடீர்னு மொட்டை போடுவார்.. சின்னம்மாதான் முதல்வராகணும்னு சொன்னாரு.. அப்புறம், காசு பார்ப்பதற்காகத்தான் அங்கே இருக்கேன்னு சொன்னார்.. மறுபடியும் உங்க பக்கம் வந்துடுறேன்ன்னு மேலூர் சாமியிடம் போய் சொன்னவர்தான் உதயகுமார் என கடுமையாக விமர்சித்தார் புகழேந்தி.

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்குகின்றனர். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதால், அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க வரப்போகின்றனரா? என்று கிண்டலடிக்கப்படுகிறார்கள்.