Puducherry goes to TTV MLAs

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதால் புதுச்சேரிக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிளவுபட்ட அதிமுக அணிகள், நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டன.

பிளவுபட்ட அதிமுக அணிகள் நீண்ட நெடிய நாளைக்குப் பிறகு இணைந்தன. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பால் டிடிவி தினகரன் அணி கடும் கோபத்துக்கு ஆளானது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் பதவிக்காக இணைந்தது என்று குற்றம் சாட்டிய டிடிவி அணியினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சின்னம்மா இல்லை என்றால் இந்த அரசு இல்லை என்றும், 132 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் டிடிவி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளனர்.

பின்னர், இவர்கள் அனைவரும் சென்ற கார்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியானது.

டிடிவு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், புதுச்சேரிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதால், புதுச்சேரிக்கு செல்வதாக கூறப்படுகிறது.

மகாபலிபுரம் சென்ற அவர்கள், அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் மதிய உணவு அருந்திய பிறகு, புதுவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.