புதுச்சேரியில் கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜகவினர் செய்கின்றதாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணாசாமி பரபரப்பு குற்றாச்சாட்டினை முன் வைத்துள்ளார். மேலும் புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சி மீது பிரதமர் மோடி அக்கறைக் கொண்டுள்ளதாகவும் கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுகின்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் முதலவர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”மத்திய அமைச்சர் கூறும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியது. அதற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறினார். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயிர் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளன. எனவே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரிக்கு மட்டும் தனியாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடிக்கு சலுகை கொடுத்துள்ளது போல் பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும் படிக்க:மழைநீர் வடிகால் பணி.. ஒழுங்காக பணி செய்யாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயும்.. மேயர் பிரியா எச்சரிக்கை..
மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தவறான தகவல்களை கூறி புதுச்சேரி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட கூடாது. புதுச்சேரிக்கு சிறப்பு நிதி கொடுப்போம் என்று மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் கடந்த ஓராண்டில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மேலும் தேர்தலில் நேரத்தில் அறித்த பல்வேறு திட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக மத்திய அரசு கடந்த ஓராண்டாக ஒரு பைசா கூட அதிகமாக புதுச்சேரிக்கு நிதி கொடுக்கவில்லை என்று சாடினார். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 ஆயிரம் கோடி திட்டத்தில் புதுச்சேரிக்கு இதுவரை ரூ.850 கோடிதான் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை.. அமைச்சர் கொடுத்த அமைச்சர்..
புதுச்சேரியில் தற்போது பினாமி ஆட்சி நடக்கிறது. ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருக்கின்றனர். இந்த ஆட்சி ஒரு குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும் என்றார். மேலும் சமீபத்தில் பாஜக அமைச்சர்கள், அந்த கட்சி தலைவருடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரியில் கிடப்பில் உள்ளதாகவும் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைவிட கேலிக்கூத்தான விஷயம் எந்த மாநிலத்திலும் நடைபெறாது. அமைச்சர்களின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மேலும் படிக்க:ராஜீவ் காந்தி கொலை.. எல்லாரையும் விடுதலை செஞ்சுட்டு போங்க..கொந்தளித்த கே.எஸ் அழகிரி
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு அமைச்சர்கள் பாஜக தலைவருடன் சென்று திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். அப்படியென்றால் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், முதல்வர் மீது நம்பிக்கை இல்லையென்றால் பதவியை ராஜனாமா செய்யுங்கள் என்றார். நீங்கள் போய் ஆளுநரிடம் புகார் கூறுவது என்பது முதல்வரை கலங்கப்படுத்தும் வேலை என்று விமர்சித்தார்.
