Asianet News TamilAsianet News Tamil

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 நிவாரணம்... முதலமைச்சர் அதிரடி..!

 புதுச்சேரியிலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Puducherry CM announces lockdown relief of Rs 3000 for all families
Author
Puducherry, First Published May 26, 2021, 3:39 PM IST

தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நியாயவிலைக்கடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிவாரண உதவி தொகைக்கான இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மலிவு விலை மளிகை பை வழங்கிடும் ​திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 

Puducherry CM announces lockdown relief of Rs 3000 for all families

தற்போது புதுச்சேரியிலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 321 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பு 99 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

Puducherry CM announces lockdown relief of Rs 3000 for all families

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்றும்,  இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios