கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதை தொடர்ந்து கடந்த 5ம்தேதி ஓ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவை, அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நியமனம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமியை, முதல்ராக அறிவித்தனர். அவருக்கு, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர். 15 நாட்களில் தனி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

அதன் பேரில் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட அதிமுக எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ். அணியினர், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அமளி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து விலகிய ஓ.பி.எஸ். தனிய அணியாக செயல்படுவதற்கு, புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஆதரவு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மாநில நிர்வாகிகள் ஒரு பிரிவினரும், தொகுதி நிர்வாகிகளும் கூண்டோடு வெளியேறினார்கள். ஆனால், புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எந்த அணிக்கும் செல்லாமல் அமைதி காத்து வந்தனர். இதேபோல் புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமனும் மவுனம் காத்தார்.

இந்நிலையில், பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழாவில், புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன், கோகுலகிருஷ்ணன் எம்பி, எம்எல்ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர்களுக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுவை அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.