public support to ops

தமிழகத்தில் ஆட்சியும், கட்சியும் இனி ஓபிஎஸ் வசம் வரும்… மேள தாளத்துடன் ஆர்.கே.நகர் பொது மக்கள் ஆதரவு…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை சேர்ந்த ஆயிரக்ணக்கான அதிமுக தொண்டர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பிளவு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

சசிகலாவுக்கு எதிராக பகீர் புகார்களை தெரிவித்து வரும் ஓபிஎஸ் அணியினர், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி வரும் 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்ன நடந்தது? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் போன்றவை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே. நகரில் வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினர்.

மேளதாளங்களுடன் பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான அதிமுக.வினர், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழகத்தில் ஆட்சியும், கட்சியும் விரைவில் ஓபிஎஸ் வசம் வரும் என ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் ஓபிஎஸ்க்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருவதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.