மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். இந்த இடைதேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடந்தால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை அண்ணா அறிவாலயத்தில், இடை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன் வெளியிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது.
தமிழகத்தில் எந்த அடிப்படை பிரச்சைனைகளும் சரி செய்யப்படவில்லை. நடைபெற உள்ள இடை தேர்தலில், மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூறி பிரச்சாரம் மேற்கொள்வோம். சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதை, மக்களிடம் திமுக விளக்கி கூறி வாக்கு கேட்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
