தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் 'ஸ்டாலின் அணி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது திமுக. இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரங்கள், எந்தெந்த தேதியில் அவருக்கு என்னென்ன பணிகள் இருக்கின்றன உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், அதுமட்டுமல்லாமல் மு.க.ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல், ட்விட்டர் பதிவுகள், உரைகள் என அனைத்தையும் இந்த செயலி மூலம் காண முடியும். சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரச்சார பயணத்திட்ட விவரங்களும் இனி வரும் நாட்களில் அந்த செயலியில் இணைக்கப்பட உள்ளது.

திமுக தொண்டர்கள் தங்கள் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு பெயரை பதிவு செய்தால் அவர்களுக்கு பிறந்தநாளன்று ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்துக்கடிதம் வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் இந்த செயலி மூலம் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை எளிதாக தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அணி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள், தலைவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்! எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்தச் செயலியின் புகைப்படத்தில் கட்சியை விட்டு விலக்கிய கு.கசெல்வத்துடன் ஸ்டாலின் இருக்கும் பழைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://www.facebook.com/200887113275448/posts/3668206263210165/?sfnsn=wiwspwa

அதேபோல் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்டாலினை சந்திக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கிறது. ’’நீங்கள் பதவிக்கு வர வேண்டும். தமிழகத்தில் ஆள வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் வர வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் நீங்கள் வந்து எங்களை பார்க்க வேண்டும். நாங்கள் ஒட்டு போட்டால் தான் நீங்கள் ஆட்சிக்கு வர முடியும். நீங்கள் வந்து எங்களை பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும்’’எனக் கூறியுள்ளனர்.

https://www.facebook.com/arivalayam/posts/3668206263210165

 ’’இவரை எல்லாம் தலைவர் என்று சொன்னால் தலைவர் என்ற பெயருக்கு அசிங்கமாக உள்ளது. தலைவர் என்றால் புரட்சித்தலைவர். தலைவி என்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருவரும்தான். ஏழைகளுக்காக திட்டங்கள் தீட்டி அயராது உழைத்தார்கள். இன்றளவும் அவர்கள் ஏழைகள் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திமுகவில் அதுபோன்று தலைவர்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. காரணம் திமுக இன்று கருணாநிதி குடும்பத்து சொத்து ஆகிவிட்டது’’என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.