தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்;- சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த அட்டவணை வெளியான பிறகு, தேர்வுகளை நடத்துவது குறித்து முதல்வரிடமும் கல்வியாளர்களிடமும் கலந்து பேச உள்ளோம். அதன்பிறகு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். மலைப்பகுதிகளில் தடை நீக்கப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார். ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி ஈரோட்டில் பயணம் மேற்கொள்ள உள்ளார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.