மோசமான சூழ்நிலையில் நிலவி வருகிறது. இனி இது நீடிக்கக் கூடாது, இனிவரும் காலங்களில் தேர்தல்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் பெருந் தொற்று நோயாக பரவியிருக்கிறது. வாக்காளர்களே அரசியல் கட்சிகளிடம் பணத்தை கேட்டு பெறும் சூழல் உருவாகியுள்ளது. 

தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் கல்லூரி உள்ளிட்ட 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் நேர்மையாகவும், பணப்பட்டுவாடா இன்றி நடைபெறும் வகையில் முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழப்புணர்வு கூட்டங்கள் நடைபெறும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை திமுக பெற்றுள்ளது. எதிர்த்து களம் கண்ட அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் மண்ணைக் கவ்வியுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளன. இந்நிலையில்தான் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எதிர்காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை திநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜனநாயக ரீதியாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி பெரியசாமி, அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தமிழன், பார்வர்ட் பிளாக் கட்சியை சார்ந்த நல்லுசாமி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சேர்ந்த மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளுமன்ற மக்கள் கட்சி, சமாஜ்வாடி கட்சி, குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் பல இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயக அரசியலை கேலிக்கூத்தாக்கும் செயல். 

மோசமான சூழ்நிலையில் நிலவி வருகிறது. இனி இது நீடிக்கக் கூடாது, இனிவரும் காலங்களில் தேர்தல்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் பெருந் தொற்று நோயாக பரவியிருக்கிறது. வாக்காளர்களே அரசியல் கட்சிகளிடம் பணத்தை கேட்டு பெறும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இதே நேரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி உள்ளிட்ட 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். முதலில் இது மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும், அதன்பிறகு போராட்டம் நடைபெறும். இதற்கு எந்த கட்சியையும் குற்றம் சாட்டவில்லை, ஆனால் எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.