Asianet News TamilAsianet News Tamil

ஆபாச ஆசிரியரால் சூடுபிடிக்கும் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்... இனி யாரும் சப்போர்ட் செய்யவே முடியாது..!

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

PSBB school affair heated by teacher ... No one can support anymore ..!
Author
Tamil Nadu, First Published Jun 4, 2021, 10:59 AM IST

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து அவரிடம் கடந்த 3 நாட்களாக நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்டு போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

PSBB school affair heated by teacher ... No one can support anymore ..!

இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

PSBB school affair heated by teacher ... No one can support anymore ..!

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில்  சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தை விற்பனை, சிறுமிக்கு நேர்ந்த பாலியல்  கொடுமை போன்றவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து, செல்வாக்குள்ள சிலருக்கு  கிடுக்கிப்பிடி போட்டனர். இந்த விஷயத்தில் வெளியாட்களின் தலையீட்டை தடுத்து விட்டார்கள். அதேபோல, பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தையும் கையாள முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 5 பேருக்கு  நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆணையத்தின் கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த இருக்கிறார்கள். இங்கே தலைவர், உறுப்பினர்கள் மட்டும் தான் விசாரணை செய்வார்கள். PSBB school affair heated by teacher ... No one can support anymore ..!

அதே நேரத்தில் இந்த விசாரணையில வேறு யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என விசாரணை அதிகாரிகள் உஷாராக இருக்கிறார்கள். இதனால் நியாயமான கேள்வி கேட்கப்படும் எனவும் அவர்கள்  நம்புகிறார்கள். ஆக மொத்தத்தில் பத்ம சேஷாத்ரி விவகாரம் இத்தோடு அடங்காது என்றே கூறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios