Asianet News TamilAsianet News Tamil

வெள்ள நிவாரணம் உதவிகளை உடனே வழங்க வேண்டும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

provide flood relief immediately said edapadi palanisamy
Author
Tamilnadu, First Published Nov 23, 2021, 2:54 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் சென்னை மாநகர் சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கி இடங்களை நேரில் பார்வையிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். மிக கன மழையினால் மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும் ஏரிகளில் இருந்து உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வேளாண் நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் சாலைகள் மூழ்கி உள்ளதோடு, சிறு, சிறு தடுப்பணைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. 

provide flood relief immediately said edapadi palanisamy

இந்நிலையில் திமுக அரசு நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ஆக உயர்த்தி வழங்கி விட வேண்டும், மறு சாகுபடி செலவிற்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும், முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மழையினால் பாதிக்கப்பட்ட ஊரக சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்யவேண்டும், உரங்கள்,  விதைகள் போன்றவை நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த விதமான நிபந்தனையும் இன்றி கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் கணக்கு உறக்கமின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும், வீடுகள் உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கு இழப்பீடு  அறிவித்து வழங்க வேண்டும் ,பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும், கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் ,மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக 5 ஆயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். இந்த திமுக அரசு செய்ய தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும் இப்போதைக்கு தான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.  இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தான்; ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் இப்போதும் உள்ளனர்.

​​provide flood relief immediately said edapadi palanisamy

அதிமுக ஆட்சியில் நிழல் அரசாங்கத்தை நடத்தி உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டவர்கள்,  ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்வர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு  பெருமை கூறியவர்கள் ,  அம்மாவின் அரசு கொண்டுவந்த நிறைவேற்றிய பல தொழில் முதலீடுகளையும் திட்டங்களை 30 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பெருமை பேசியவர்கள், இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் நீர் வழித்தடங்களை தூர்வாராமலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும்,  ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அம்மாவின் அரசு மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அம்மாவின் அரசு ஆட்சி செய்த போது இருந்த அதே திறமை வாய்ந்த அதிகாரிகள் தான் இப்போது பதவியில் உள்ளனர் . அந்த அதிகாரிகள்தான் மீட்பு பணிகளில் திறம்பட ஈடுபட்டு ஒரு சில நாட்களில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.  ஆனால் அவர்களின் திறமையை இந்த அரசு ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.  இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் அம்மாவின் அரசு எப்படி திறம்பட செயலாற்றி மக்களின் துயரைபோக்கி,  உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரவேண்டும் என்ற இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios