Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் பயங்கரம்... கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... தடியடி... போலீசார் அராஜகம்..!

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்திய சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Protestors at Karnal bypass break police barricading to enter Delhi as farmers tractor rally is underway in the national capital
Author
Delhi, First Published Jan 26, 2021, 12:38 PM IST

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்திய சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கினர்.

Protestors at Karnal bypass break police barricading to enter Delhi as farmers tractor rally is underway in the national capital

இதனையேற்ற விவசாய சங்கங்கள், குடியரசு தின விழா முடிந்த பிறகு பேரணி துவங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி தொடங்கியது. டெல்லி - ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் பேரணியை நடத்தினர். குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டது. 

Protestors at Karnal bypass break police barricading to enter Delhi as farmers tractor rally is underway in the national capital

இதனையடுத்து, டெல்லிக்கு நுழைய சஞ்சய்காந்தி போக்குவரத்து நகர் வழியாக வந்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி விவசாயிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios