மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக, திமுக, தந்தை பெரியார் கழகம், மே 17 இயக்கத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை கலவரமயமாகி வருகிறது. 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும்போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய அவர்கள் மோடியை விமர்சித்து குழக்கம் செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய திமுக, அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், வைகோ மற்றும் மதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

 ’’பிரதமர் மோடி மதுரையை விட்டு செல்லும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம். அவர் வரும் போது, கறுப்புக்கொடி காட்டுவோம் என்று முன்னதாகவே நான் 20 முறை அறிவித்திருக்கிறேன். நாங்கள் ஓட்டுக்காக போராட்டம் நடத்தவில்லை. தமிழக மக்களுக்காகவே போராட்டம் நடத்துகிறோம்" என்று வைகோ ஏற்கெனவே எச்சரித்து இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று வருகிறார்.