கட்சியை எழுச்சிப்படுத்த விஜய பிரபாகரன் சில அதிரடி முடிவுகளை எடுக்க விரும்புகிறார். அதற்கு கணிசமான பண செலவுகள் தேவைப்படுகிறது
விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, அதில் உண்மையான ஒன்று என்னவென்றால் தனது சொத்து சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்துதான். அதாவது, சென்னை கோயம்பேடில் இருக்கிறது விஜயகாந்துக்கு சொந்தமான திருமண மண்டபம். தி.மு.க. ஆட்சியில் கோயம்பேட்டில் பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் நடந்தபோது இந்த மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்க வேண்டும்! என்றார்கள். ஆனால் அதை இடிக்காமலும் பணியை செய்யலாம் என்று மேப் மற்றும் ஆவணத்தோடு ஒரு டீம் தகவல் தந்தது. ஆனாலும் இடித்தார்கள். இதில் கண் சிவந்த கேப்டன், துவங்கியதுதான் தே.மு.தி.க.
தி.மு.க.வின் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமாக இருந்து சாதித்தவருமான கருணாநிதியையும், அவரது மகனும் சிட்டிங் தமிழக முதல்வருமான ஸ்டாலினையும் மிக மூர்க்கமாக அன்று எதிர்த்துதான் தன் அரசியலை வளர்த்தார், தானும் அரசியலில் வளர்ந்தார் விஜயகாந்த். குறுகிய காலத்தில்யே ‘தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்’ எனும் மிகப்பெரிய பதவியையும் அவர் தொட்டதும், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்ததை தென்னிந்தியா அறியும்.

இந்நிலையில் விஜயகாந்த் இருக்கும் போதே அக்கட்சிக்குள் அவரது மனைவி பிரேமலதா வந்தார், கூடவே தன் தம்பி சுதீஷையும் அழைத்து வந்தார். இருவரும் கட்சியின் மிக முக்கிய தூண்களாக இருந்து கட்சியை தாங்கினர். ஆனால் விஜயகாந்த் மிகவும் சுகவீனப்பட்ட பிறகு கட்சியை வழி நடத்துமளவுக்கு அதிகாரத்தை கையிலெடுத்த இவர்களால் அக்கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியவில்லை.
இந்நிலையில்தான் சில வருடங்களுக்கு முன்பு, விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரனை கட்சிக்குள் கொண்டு வந்தார் பிரேமலதா. செல்ல நாய் வளர்ப்பு, பேட்மின்டன் டீம் நிர்வாகம் என்று இருந்த பிரபாகரனை அரசியல் ரூட்டுக்கு மாற்றி தயார்படுத்தினார் பிரேமலதா. இதற்கான தனது உடல் எடையை கூட பல கிலோ குறைத்து ஸ்லிம் அண்டு சிக்கென வந்து நின்றார் பிரபாகரன். எடுத்த எடுப்பிலேயே கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சித்து அரசியலை தெறிக்கவிட்டார்.
இப்படி தே.மு.தி.க.வை ஏதோ கம்பெனி ரேஞ்சுக்கு அதன் தலைமை குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் வழிநடத்தியும் கூட வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியாத சூழல். இந்நிலையில்தான் இப்போது விஜயபிரபாகரனுக்கும், சுதீஷுக்கும் இடையில் சில உரசல்கள் வந்துள்ளன என்று தே.மு.தி.க.வினரே சொல்கிறார்கள். இதுபற்றி பேசுவோர் “கட்சியை எழுச்சிப்படுத்த விஜய பிரபாகரன் சில அதிரடி முடிவுகளை எடுக்க விரும்புகிறார். அதற்கு கணிசமான பண செலவுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் கேப்டனின் பலப்பல கோடி மதிப்புடையை சொத்துக்களும், கட்சியின் முக்கிய விஷயங்களும் சுதீஷ் கையில் உள்ளன. அவரோ பிரபாகரனின் துடிப்புக்கு தடைபோட்டு ‘இள ரத்தம் நீ. அவசரப்பட்டு பணத்தை அள்ளி வீசி காலி பண்ணிட கூடாது. நமக்கு சூழல் சரியில்லை. பொறுமையா இரு. காலம் கனிஞ்சு வர்றப்ப துணிஞ்சு செலவு பண்ணுவோம்.’ன்னு சொல்லிடார்.

ஆனால் பிரபாகரனின் நிலைப்பாடோ ‘துணிஞ்சு செலவு பண்ணினால்தான் நமக்கான காலமே உருவாகும். அந்த சொத்தெல்லாம் எங்க அப்பாவோடதுதானே. நீங்க யார் தடுக்க..?’ என்பதாகவே இருக்கிறதாம்.
ஆனால் சுதீஷோ நிதியை ஓப்பன் பண்ணிவிட முன் வராத நிலையில மாமன், மருமகன் ரெண்டு பேருக்கும் நடுவுல கருத்து ரீதியான முட்டல் மோதல் உருவாகியிருக்குது. இதுல சிக்கி தவிக்கிறது பிரேமலதாதான். பல வருஷமா கட்சியை சுமக்கிற தம்பிக்கு சப்போர்ட் பண்ணவா அல்லது கட்சிக்காக எதையும் இழக்க தயாராக இருக்கிற மகனுக்காக சப்போர்ட் பண்றதான்னு புரியாம தவிக்கிறாங்க. ஆனால் கேப்டனுக்குதான் எதுவும் புரியலை பாவம்.” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
கேப்டன் குடும்பத்தில் சொத்தினை மையமாக வைத்து இப்படியொரு உரசல் உருவாகியிருக்கிறது என்பது பரபரப்பாகியிருக்கும் நிலையில், தே.மு.தி.க.வின் தலைமை நிலைய செயலாளரான பார்த்தசாரதியோ “எல்லா கட்சிக்குமே கடின காலம்னு ஒண்ணு இருக்கும். அதுதான் இப்ப எங்களுக்கு வந்திருக்குது. இதை தாண்டி கூடிய விரைவில் பெருசா வளர்வோம்” என்கிறார்.
அதேப்போல், சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரனுக்கு இடையில் எந்த மோதலுமில்லை. வதந்திகளை கண்டுக்காதீங்க. ஏதோ வயிறெரிஞ்ச பசங்க பண்ற வேலை.” என்கிறார். அது சரி..! உங்க கட்சிக்காரங்க தான் இப்படி பேசுறாங்க பாஸு…
