Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடங்கள் குறைப்பு... ஆன்லைனில் பாடம் நடத்த தடை... செங்கோட்டையன் உத்தரவு..!

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 

Prohibition of online lesson ... Senkottaiyan orders
Author
Tamil Nadu, First Published May 27, 2020, 12:15 PM IST

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாமல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றன. Prohibition of online lesson ... Senkottaiyan orders

இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘’தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது. ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios