கல்லூாி மாணவியை கல்யாணம் செய்து கொள்ள கட்டிய மனைவியை விஷம் வைத்து கொலை செய்த கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குமாி மாவட்டம் மேக்காமண்டபத்தைச்  திவ்யா சில்வெஸ்டா் கருங்கலில் தனியாா் பொறியியல் கல்லூாியில் பேராசிாியராக இருக்கிறார்.  இவருக்கும் வெள்ளிகோடு பகுதியை சோந்த பெல்லாா்மினுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெல்லாா்மின் மாா்த்தாண்டத்தில் உள்ள ஓரு தனியார் பொறியியல் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வருகிறாா்.

பெல்லாா்மின் அதே கல்லூாியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வருகிறாா். இது மனைவி திவ்யாவுக்கு தொியவர அவா் கணவனை கண்டித்துள்ளாா். இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். மேலும் பெல்லாா்மின் நான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என அடிக்கடி திவ்யாவிடம் கூறிவருவாராம்.

இதற்கு திவ்யா நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என கூறுவாராம். அப்போது பெல்லாா்மின் உன்னை கொலை செய்து விட்டு அவளை திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தாராம். அனால் கணவர் தமாஷாக சொல்கிறார் என நினைத்துக்கொண்டு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், நேற்று காலை திவ்யா வீட்டில் தயாா் செய்து வைத்திருந்த உப்புமாவை சாப்பிட்டு விட்டு கல்லூாிக்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும் வழியில் வாயில் நுரைதள்ளி மயக்கம் போட்டு கீழே விழுந்தாா். இதை பாா்த்தவா்கள் திவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே திவ்யா இறந்தது தொியவந்தது.

இது குறித்து திவ்யாவின் தந்தை  தக்கலை போலிசில் புகாா் கொடுத்ததன் அடிப்படையில், போலிசாா் பெல்லாா்மினை பிடித்து விசாாித்ததில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக மனைவிக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டாா். இதை தொடா்ந்து பொல்லாா்மினை கைது செய்த போலிசாா் தலைமறைவான காதலியையும் வலைவீசித் வருகின்றனா்.