Asianet News TamilAsianet News Tamil

2020- பிறந்தவுடன் இப்படி ஒரு செய்தியா ?…தொடர்ந்து 4-வது மாதமாக முக்கிய துறைகள் உற்பத்தி கடும் வீழ்ச்சி..

தொடர்ந்து 4வது மாதமாக கடந்த நவம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது. இது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துள்ளது.
 

production is very worst in india
Author
Delhi, First Published Jan 3, 2020, 7:50 AM IST

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடும் சரிவை சந்தித்து வருகிறது. 

தொடர்ந்த 4வது மாதமாக கடந்த நவம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கி உள்ளது.

production is very worst in india

கடந்த நவம்பரில் முக்கிய 8 துறைகளில் 5 துறைகளின் உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது. இதனால் அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது. தற்போது பொருளாதாரம் தேக்கநிலையில் இருப்பதே இது வெளிப்படுத்துகிறது. 2018 செப்டம்பரில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 3.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

production is very worst in india

டிசம்பர் 31 ஆம் தேதி பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. இந்நிலையில் தற்போது கடந்த நவம்பரிலும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது என்ற தகவல் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios