Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் தேமுதிக - பாமக இடையே சிக்கல்..?

தேமுதிக-பா.ம.க கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
 

Problem between DMDK and pmk in AIADMK alliance ..? G.K. Mani is coming to say ..!
Author
Chennai, First Published Feb 23, 2021, 10:14 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி இன்னும் இறுதியாகாத நிலையில், இன்று முதல் பாமக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் பாமக  தலைவர் ஜி.கே. மணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் விருப்ப மனுக்களை அளித்துவருகிறார்கள்.

Problem between DMDK and pmk in AIADMK alliance ..? G.K. Mani is coming to say ..!
கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் முடிவெடுக்க டாக்டர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அவர் விரைவில்அறிவிப்பார். இதேபோல வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் டாக்டர் ராமதாஸ் முடிவை அறிவிப்பார். சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தெரியவரும். Problem between DMDK and pmk in AIADMK alliance ..? G.K. Mani is coming to say ..!
தேமுதிக-பா.ம.க கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை எனசமூக வலைத்தளங்களில்  வெளியான தகவல் தவறு என எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார். பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து நாங்கள் போட்டியிட்டு வருகிறோம். எனவே, எங்களுடைய கூட்டணியில் முரண் ஏதும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்ட பல கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. சில கோரிக்கைகள் மட்டுமே பரிசீலணையில் உள்ளன. அரசு  செய்த நலத்திட்டங்களை நாங்கள் பாராட்டியு இருக்கிறோம். குறைகளை சுட்டிக்காட்டியும் இருக்கிறோம்.” என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios