உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில்  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலருமான எஸ்ஆர். தாராபூரி போலீஸாரால் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்
லக்னோ நகரில் உள்ள தாராபூரியைச் சந்தித்துபேச காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முடிவுசெய்தார். 

ஆனால், பிரியங்கா காந்திக்கு போலீஸார் அனுமதி மறுத்துஅவரை காரில் செல்லக்கூறினர். ஆனால் பிரியங்கா காந்தி 2.5 கி.மீ நடந்து செல்வதாகக்கூறினார்.  
அதன்படி பிரியங்கா காந்தி நடந்து செல்வகையில், திடீரென காங்கிரஸ் நிர்வாகி ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் பிரியங்கா காந்த சென்றார். 

பிரியங்கா காந்தி பைக்கில் செல்வதைப் பார்த்த போலீஸார் லக்னோ நகர சாலையில் அவரை நீண்ட நேரம் துரத்தி ஒரு இடத்தில் மடக்கிப் பிடித்தனர்.
தாராபூரியைச் சந்திக்க கூடாது என்று பிரியங்கா காந்திக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். 

ஆனால் போலீஸாருடன் பிரியங்கா காந்தி கடுமையாக வாக்குவாதம் செய்தார், எதற்காக என்னை நிறுத்தி இப்படி சுற்றி வளைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டார். அதன்பின் போலீஸார் கேட்டுக்கொண்டபடி பிரியங்கா காந்தி காரில் சென்றார்.


இதன்பின் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் பேசுகையில், “என்ன போலீஸார் இவர்கள், முதல்வர் யோகியின் அடியாட்கள்போன்று செயல்படுகிறார்கள், யாரையும் சந்திக்க அனுமதி மறுக்கிறார்கள். 

தாராபூரி குடும்பத்தினரைச் சந்திக்க நான் சென்றபோது என்னை மறித்த போலீஸார் என் கழுத்தை நெறித்து என்னைப் பிடித்து தள்ளினார்கள். அதன்பின் என்னை போலீஸார் சூழ்ந்து கொண்டபோது எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு நான் கட்சி நிர்வாகி ஒருவருடன் பைக்கில் சென்றேன்” எனத் தெரிவித்தார்