காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தனது சகோதரியான பிரியங்காவை உத்திரப்பிரதேச கிழக்குப்  பகுதியின் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமித்தார்.

இதையடுத்து ஜோதிர்  ஆதித்ய சிந்தியா இன்று பிரியங்கா  பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  இது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் இந்தத் திட்டத்தை பிரியங்கா திடீரென மாற்றினார். 

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா பண மோசடி வழக்கு ஒன்றுக்காக அமலாக்கப் பிரிவு அலுவலகத்தால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ராபர்ட் வத்ரா தன் மீதான வழக்குகளுக்காக அரசின் விசாரணை அமைப்பின் முன் ஆஜராவது இதுவே முதல் முறை. இதையடுத்து அவரை தன் காரிலேயே அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிராப் பண்ணிய பிரியங்கா நேரடியாக காங்கிரஸ் அலுவலகம் சென்றார்.

அங்கு திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்போற்றுக் கொண்டார்.  ராபர்ட் வத்ரா விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் நிலையில் அங்கு குவிந்திருந்த பத்திரிக்கையாளர்கள், பிரியங்கா பொறுப்பேற்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது விழுந்தடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகம் வந்தனர்.

இதனால் ராபர்ட் வத்ரா குறித்து செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக பிரியங்கா பதவி ஏற்றுக் கொண்டது வைரல் ஆகியது. இப்படி முதல் அட்டெம்ட்டிலேயே பிரியங்கா அரசியல் பண்ணிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.