ஆண்களிடமிருந்து அதிகாரத்தைக்  கைப்பற்றுங்கள் என அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .  பிரியங்கா நேற்று லக்னோவில் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ,பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் ,  செய்தியாளர்கின் பல்வேறு கேள்விகளுக்கு  அளவில் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார் ,  

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் அப்போது தான் பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்றார்,   மாநிலங்களில் நடந்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்கள் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் .  வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடாது .  அதிகாரத்திற்கு அதிக அளவில் பெண்கள் வரவேண்டும் தங்கள் அதிகாரத்தால் பெண்களை பின்னுக்குத்தள்ளி ஆண்கள் பறித்து வைத்துள்ள அதிகாரத்தை பெண்கள் கைப்பற்ற வேண்டும்  என எனது  சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.  அதேபோல் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளில் பெண்களே நேரடியாக போட்டியிட வேண்டும் ,  உங்களுக்கு உரிய அதிகாரத்தை நீங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். 

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுங்கள்,  உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கு பெறுங்கள்  என அவர் கூறினார் .  நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது . இதற்கு  மாநில அரசுகளே  பொறுப்பாகும் ,  அரசு பெண்களுக்கு ஆதரவான அரசா..?  அல்லது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசா.?  என்பதை முதலில்  மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்  அதே பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இருக்க வேண்டும் என எண்ணும் போது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார் .