Asianet News TamilAsianet News Tamil

கொரோனா மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரம்... மோடி மீது பிரியங்கா காந்தி ஆவேசம்..!

மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது. இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்

Priyanka Gandhi is angry with Modi for levying GST on corona drugs
Author
India, First Published May 28, 2021, 4:50 PM IST

கொரோனா மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. விரியை நீக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் வராமல்தான் இருக்கிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிப்பு செய்து வருகின்றன. மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிகளுக்கு, மாநில அரசுகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடும் நிதிச் சுமையை மாநில அரசுகள் சந்தித்து வருகின்றன. இருந்தபோதும் மக்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கி கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றன.

Priyanka Gandhi is angry with Modi for levying GST on corona drugs

இந்த நெருக்கடியான சூழலில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ஜி.எஸ்.டி வரியில் விலக்கு கொடுத்தால், மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படும். இதனால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முடியாது' எனத் தெரிவித்திருந்தார்.Priyanka Gandhi is angry with Modi for levying GST on corona drugs

இதையடுத்து, எட்டு மாதங்கள் கழித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரமானது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Priyanka Gandhi is angry with Modi for levying GST on corona drugs

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களுக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால், உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது. இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios