Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்த மரணங்கள்…! பிரியங்கா காந்தி மீண்டும் கைது…! உத்தரப்பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரியங்கா காந்தியை முன்னிறுத்தியே காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

Priyanka gandhi arreste in uttarpradesh
Author
Agra, First Published Oct 20, 2021, 5:55 PM IST

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரியங்கா காந்தியை முன்னிறுத்தியே காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச அரசியலில் கலக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். ஆனால் அவரை அடக்கி ஒடுக்க யோகி தலைமையிலான பாஜக அரசு அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கார் ஏற்றிக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க முதல் அரசியல் கட்சி தலைவராய் பிரியங்கா காந்தி புறப்பட்டார்.

Priyanka gandhi arreste in uttarpradesh

பிரியங்காவை தடுத்து நிறுத்திய உத்தரப்பிரதேச போலீஸார் அவரை ஒரு நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் வைத்தனர். ஆனாலும் பாட்டி இந்திராவை போல மனம் தளராது போராடிய பிரியங்கா காந்தி இறுதியில் தமது சகோதரர் ராகுலையும் அழைத்துச்சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்ப உறவுகளை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். இதையடுத்து நாடு முழுவதும் பிரியங்கா காந்தியின் இமேஜ் டாப் கியரில் உயர்ந்தது. அடுத்தடுத்து உத்தரப்பிரதேசத்தில் பேரணிகளை நடத்தி அங்கு கலக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

Priyanka gandhi arreste in uttarpradesh

இந்தநிலையில் தான், ஜெகதீஷ்புரா மாவட்டத்தில் 25 லட்சம் திருடியதாக கூறிய அருண் வால்மீகி என்பவரின் வீட்டில் போலீசார் சோதனைக்கு சென்றபோது அருண் வால்மீகி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதிக்கபப்ட்ட குடும்பத்தினரை நேரில் ஸ்ந்திக்க பிரியங்கா காந்தி இன்று ஆக்ரா நோக்கி சென்றார். ஆனால் அவரை சுங்கச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் பிரியங்கா காங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் இது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என்று கூறி பிரியங்காவை தடுத்தனர். அதையும் மீறி பிரியங்கா புறப்பட முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர். ஒரே மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios