Asianet News TamilAsianet News Tamil

தனியார் நிறுவனங்கள் சார்பில் 5000 படுக்கைகள் தயார்..!! கொரோனா சிகிச்சைக்கு எடுக்கப்பட்ட அதிரடி..!!

தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது .

private company's arranging 5 thousand bed specialty for corona treatment
Author
Chennai, First Published Mar 31, 2020, 10:53 AM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வேகவேகமாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது , ஏனெனில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .  அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் மற்றும் அவர்களுக்கு உதவியாக கார்ப்ரேட் நிறுவனங்களும் மருத்துவ வசதிகள் செய்ய உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுமார் 15,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன . 

private company's arranging 5 thousand bed specialty for corona treatment

மேலும் கூடுதல் படுக்கை வசதிகள்  தேவையென கணிக்கப்பட்டுள்ள நிலையில்  அப்பல்லோ மருத்துவமனை இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட நோயாளிகள் சிகிச்சை மையத்தை உருவாக்கியுள்ளது . கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ,  இந்துஸ்தான் யூனிலீவர் ,  டாச்சீஸ் வாங்கி ,  ஒயோ ,  சோமடோ ,  லெமன் டிரி ,  உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சிகிச்சை அளிப்பதற்கான தனி அறைகளை உருவாக்கியுள்ளனர் .  தனியார் ஹோட்டல்கள் இணைந்து சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் கொண்ட அறைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக அமைத்துள்ளனர் அதேபோல் தற்போது உள்ள நிலைமையில் இருந்து தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் அவர்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 

private company's arranging 5 thousand bed specialty for corona treatment

தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது .  இந்த தனி அறைகளை அமைப்பதற்கான செலவுகளை எஸ்பிஐ  ஏற்றுக்கொண்டுள்ளது அதேபோல நோயாளிகளுக்கு தங்கும் செலவு மருத்துவ செலவு போன்றவற்றை ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .  முதற்கட்டமாக 500 அறைகள் தயாராக உள்ளதாகவும் ,  தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளபடும் என்றும் அறிவித்துள்ளது . லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் கொடுத்துள்ளார்  அரைக்கு 3 ஆயிரம் ரூபாயும்,  ஜிஞ்ஜர் ஹோட்டல் வழங்கியுள்ள அறைக்கு 2000 ரூபாய் பணமும் வசூல் செய்யபட உள்ளது.  இந்தக் கட்டணத்தில் உணவு அடக்கம் உணவை சோமோட்டோ வழங்கும் என கூறப்பட்டுள்ளது.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios